உள்ளூர் செய்திகள்

24 வழக்குகளுக்கு சமரச தீர்வு

Published On 2023-07-09 08:28 GMT   |   Update On 2023-07-09 08:28 GMT
  • 24 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
  • தீர்வுத் தொகையாக ரூ.76 லட்சத்து 28 ஆயிரத்து 645 அறிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, இரு தரப்பினரின் ஒப்புதலுடன் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் மூலமாக தீா்வு காணப்பட்டு வருகிறது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) கோபிநாத் தலைமையில் நடந்தது.

முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பரணிதரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஷ்வரன், நீதித்துறை நடுவர் நீதிபதி வெர்ஜின் வெஸ்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் கதிரவன் வரவேற்று பேசினார். ராமநாதபுரம், ராமேசுவரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூா், கமுதி பகுதிகளில் 8 அமா்வுகளில் 251 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 24 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது.

தீர்வுத் தொகையாக ரூ.76 லட்சத்து 28 ஆயிரத்து 645 அறிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News