உள்ளூர் செய்திகள்

புதுப்பிக்கப்பட்ட புனித சவேரியார் ஆலய புனிதப்படுத்துதல் விழா

Published On 2023-09-30 09:04 GMT   |   Update On 2023-09-30 09:04 GMT
  • ஆர்.எஸ்.மங்கலம் சவேரியார்பட்டணத்தில் புதுப்பிக்கப்பட்ட புனித சவேரியார் ஆலய புனிதப்படுத்துதல் விழா நடக்கிறது.
  • விழா ஏற்பாடுகளை அருள் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

ஆர்.எஸ்.மங்கலம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சவேரியார்பட்டணத்தில் பிரசித்தி பெற்ற புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் ஆலயம் புனிதப்படுத்துதல் விழா இன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

அதன்படி புனித திருக்கொடி மரம், புனிதர்களின் கெபி ஆகிய வையும் புனிதப்படுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு அளிக்கப்படுகி றது. 5.30 மணிக்கு புதிய திருக்கொடி மரத்தை சிவகங்கை மறைமாவட்ட பொருளாளர் சந்தியாகு புனிதப்படுத்தி பிரார்த்தனை செய்கிறார். 6 மணிக்கு பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை திறந்து வைத்து புனிதப்படுத்தி சிறப்பு திருப்பலி நடத்துகிறார். 8 மணிக்கு நன்றியுரையும், பாராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருப்பீடத்தை ஓரிக்கோட்டை தொழி லதிபர் அமல்ராஜ் திறந்து வைக்கிறார். புனிதர்களின் கெபியை ஆர்.எஸ்.மங்கலம் பங்கு பணியாளர் வட்டார அதிபர் தேவ சகாயம் புனிதப்படுத்துகிறார். விழா ஏற்பாடுகளை அருள் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News