- கீழக்கரையில் பட்டமளிப்பு விழா நடந்தது.
- கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் தைக்கா அப்துல் ஓபுர் நன்றி கூறினார்.
கீழக்கரை
உலகக் கல்வியுடன் திருக்குரானை மனப்பாடம் செய்து முடித்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா கீழக்கரை சதக்கத்துல்லா அப்பா வளாகத்தில் நடந்தது. அதாயி கல்வி குழுமத்தின் சார்பில் சுப்ரீம் நிறுவனர் முஹம்மது நிசார் பாஜில் ஜமாலி, சென்னை மற்றும் கீழக்கரை அதாயி பெண்கள் ஹிப்ளு பள்ளி தலைவர் ஹபிபுல்லாகான், கீழக்கரை அதாயி இஸ்லாமிக் பள்ளி தலைவர் ஜஹுபர் கமால், கீழக்கரை சுன்னத்துல் ஜமாத் பவுண்டேஷன் ஒபூர் ஆகியோர் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். துபாய் ஈமான் அமைப்பின் தலைவர்-தொழிலதிபர் ஹபிபுல்லா கான் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். இதில் குரானை மனப்பாடம் செய்த 25 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் தைக்கா அப்துல் ஓபுர் நன்றி கூறினார். விழாவில் கீழக்கரை பல்வேறு ஜமாத், சங்க நிர்வாகிகள், பிரமுகர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.