உள்ளூர் செய்திகள்
சேதமடைந்த கட்டிடங்களை இடிக்க கோரிக்கை
- கீழக்கரையில் சேதமடைந்த கட்டிடங்களை இடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
- பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், இடிந்து விழும் நிலையில் உள்ளது.
கீழக்கரை
கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் முஹம்மது சாலிஹ் உசைன் தலைமையில் நடந்தது. கீழக்கரை நகராட்சியில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், இடிந்து விழும் நிலையில் உள்ள அபாயகரமான கட்டிடங்களை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழக்கரை தாலுகாவில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் தாஜுல் அமீன், இணை செயலாளர் அஹமது மிர்ஷா, பொருளாளர் ஜாபிர் சுலைமான், செய்தி தொடர்பாளர் முகைதீன் இப்ராகீம், செயற்குழு உறுப்பினர்கள் அய்யூப் கான், அஹமது ஹூசைன் ஆசிப், செய்யது மகமூது ரிபான், உறுப்பினர்கள் சீனி முஹம்மது தம்பி, ஹபீப் முஹம்மது மன்சூர், ஜியாவுல் அக்தர், நபீல் சதக்கத்துல்லா, அஹமது முபீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.