கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
- முதுகுளத்தூர் அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
- அரசு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புஷ்பவனம் கிராமம் உள்ளது. இங்கிருந்து வளநாடு, செங்கப்படை வழியாக முதுகுளத்தூர் மற்றும் சத்திரக்குடி செல்வதற்கு 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க முடிவு செய்யப்ட்டது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப் பட்டது.
இதை தொடர்ந்து மண் சாலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டப்பட்டு சாலையின் இரு புறங்க ளிலும் ஜல்லிக்கற்கள் குவிக்கப்பட் டுள்ளன. ஆனால் பணிகள் தொடங்கப்படாமல் கி டப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூ ரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், அன்றாட வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதியடைந் துள்ளனர்.
சாலையில் ஜல்லிக் கற்கள் குவியலாக கிடப்ப தால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. வளநாட்டில் இருந்து செங்கப்படை வழியாக புஷ்பவனம் கிராமத்திற்கு செல்லும் அரசு பஸ் கடந்த 3 மாதங்களாக இயக்கப்பட வில்லை. இதனால் அந்த பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்கள், இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்ற னர். அவசர தேவைகளுக்கு கூட ஆம்புலன்ஸ், ஆட்டோக்கள் வர மறுப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மழை பெய்தால் சாலை சேறு, சகதியாகி நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது என்றும் அவர்கள் வேதனை தெரி விக்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரி களிடம் பலமுறை புகார் அளித்தும் நடவ டிக்கை எடுக்கப்படாமல் உள்ளதாகவும், இந்த சாலை பணியை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் சாலையில் ஜல்லிக்கற்கள் சிதறி கிடப்பதால் புஷ்பவனம் கிரா மத்திற்கு செல்லும் அரசு பஸ் செங்கப்படை கிராமத்தோடு திரும்பி விடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைத்து புஷ்பவனம் கிராமம் வரை அரசு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.