மதுபான கடையை அகற்றகோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
- ராமநாதபுரத்தில் மதுபான கடையை அகற்றகோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- சிக்கலை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் ஆதம் நகரில் செயல்படும் மதுபான கடையை அகற்ற வேண்டும், கடலாடி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து சிக்கலை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் அக்கிம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஆயிஷா, மாவட்ட அமைப்பாளர் சதாம்ராஜா, மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞர் சங்கதலைவர் பாலா, மாவட்ட தலைவர் சந்தானதாஸ், தொழிற்சங்க தலைவர் லட்சுமணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ராமநாதபுரம் நகர செயலாளர் இப்ராஹிம், ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மராஜ், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம், ராமநாதபுரம் ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் ஜகுபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.