உள்ளூர் செய்திகள்

மஞ்சக்கொல்லை ஊராட்சியில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். 

வளர்ச்சி திட்டப்பணிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும்

Published On 2023-06-09 09:44 GMT   |   Update On 2023-06-09 09:44 GMT
  • வளர்ச்சி திட்டப்பணிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்று கலெக்டர் விஷ்ணுசந்திரன் உறுதி அளித்துள்ளார்.
  • உடனுக்குடன் செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம், மஞ்சக்கொல்லை ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் கிராம மக்களை நேரில் சந்தித்து அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது கலெக்டர், பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், மஞ்சக்கொல்லை ஊராட்சி யில் பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் பெற்று பயன்பெறு கிறீர்களா? என கேட்டறிந்த துடன், மேலும் பல்வேறு துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென கூறினார்.

ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குடும்ப உறுப்பினர்க ளிடம் தங்களுக்கு தேவை யான வருவாய்த்துறை சான்றுகள் உரிய காலத்தில் கிடைக்கப்பெறுகிறதா? எனவும், அதேபோல் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியாக பொருட்கள் வழங்கப்படுகிறதா? மற்றும் குடிநீர் வழங்குவதன் விவரம் போன்றவற்றை பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். தொடர்ந்து ஊராட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் உடனுக்குடன் செயல்ப டுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.

Tags:    

Similar News