உள்ளூர் செய்திகள்
கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்
- தொண்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
- 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் மீனவர்கள் அதிமாக வசிக்கும் பகுதியான கடற்கரை எதிரே கடல் சூழ்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் முன்பு அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். வலைகளில் அதிகமாக மீன் விழவேண்டும், புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்க வேண்டிக்கொண்டு செல்வார்கள்.
2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது திருவிழாநடைபெறும் நிலையில் மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் தொண்டியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.