உள்ளூர் செய்திகள்

ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

Published On 2023-01-17 09:28 GMT   |   Update On 2023-01-17 09:28 GMT
  • பொங்கல் விடுமுறை, சபரிமலை சீசன் முடிந்ததை முன்னிட்டு திரளான பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் வழிபாடு செய்தனர்.
  • அக்னி தீர்த்க்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை கொடுத்தனர்.

ராமேசுவரம்

பொங்கல் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் அய்யப்பன் கோவிலில் மகரஜோதி முடிந்து ராமேசுவரத்திற்கு இன்று காலை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனம் மற்றும் பஸ்கள் மூலம் வந்தனர். அவர்கள் அக்னி தீர்த்க்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை கொடுத்தனர்.

அய்யப்ப பக்தர்கள் அக்கினி தீர்த்த கடலில் புனித நீராடி, பின்னர் அனைத்து பக்தர்களும் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களுடன் நீராடினர். தொடர்ந்து ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி உள்பட அனைத்து சன்னதியிலும் பல மணி நேரம் காத்திருந்து வழிபாடு செய்தனர். அதிகளவில் வந்த பக்தர்கள் கூட்டத்தால் ராமேசுவரம் பகுதியில் திருவிழா கோலம் போல் காட்சியளித்தது. 

Tags:    

Similar News