- 10 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
- அதிக பட்சமாக ரூ.40லட்சம் வரையும் மானியம் பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பயனாளி களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு கலந்து கொண்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில், இணை மானிய திட்டத்தின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.20.15 லட்சம் மதிப்பிலான கடனு தவிகள் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த திட்டம் ராமநாத புரம் மாவட்டத்தில் ப்புல்லாணி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியங்களில் 143 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் தொழிற்கடன்களுக்கு 30 சதவீதமும், அதிக பட்சமாக ரூ.40லட்சம் வரையும் மானியம் பெறலாம். தனிநபர், குழு தொழில்க ளுக்கு கடன் வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் தொழில் கடன் பெறுபவர் பங்களிப்பு தொகை பொது பிரிவினர் 10 சதவீதம், சிறப்பு பிரிவினர்களுக்கு 5சதவீதம் செலுத்த வேண்டும். கடன் பெறுவோர் 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnrtp.org/citizenlog.in இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்ய லாம். விண்ணப்பத்தை அந்தந்த ஊராட்சி தொழில் சார் வல்லுநர்களிடம் பெறலாம்.
இந்த திட்டம் குறித்த தகவல்களுக்கு மகளிர் வாழ்வாதார சேவை மையம் (மண்டபம் மற்றும் திருப்புல்லாணி வட்டாரங்களுக்கு 72004 36477 என்ற தொடர்பு எண்ணிலும், திருவாடனை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரங்களுக்கு 90477 08040 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வாழ்ந்து காட்டு வோம் திட்ட அலுவலகத்தை 9486745280, 8300098120 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட செயல் அலுவலர் குமரன் , செயல் அலுவலர்கள் ராஜபாண்டி, தொழில் நிதி வல்லுநர் சத்திய சொரூபன் , உதவி பொறியாளர் பிரதீப், தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.