தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. நூதன போராட்டம்
- ராமநாதபுரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் நூதன போராட்டம் நடந்தது.
- பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு துரோகம் செய்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து அம்பேத்கர் வேடமிட்டவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த பா.ஜ.க. (எஸ்.சி) அணி போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.
இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் இ.எம்.டி.கதிரவன், மாவட்ட துணைத்தலைவர் முத்துசாமி, ஐகோர்ட்டு வக்கீலும், பா.ஜனதா பிரமுகருமான சண்முகநாதன், மாநில எஸ்.சி. அணி செயலாளர் பிரபு, நகர தலைவர் சுப நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கண்ணன், மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் சேகர், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பாரதிராஜன், மாவட்ட பொது செயலாளர் காளிராஜா மற்றும் நேதாஜி உள்பட பா.ஜனதா மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அந்த மனுவில், மத்திய அரசு பட்டியல் என சமுதாய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை தி.மு.க. அரசு முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புகிறது. மேலும் பட்டியலின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு துரோகம் செய்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தில் நகர தலைவர் பிச்சை, மாவட்ட செயலாளர் உமாரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கண்ணன், கடலாடி தெற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் ஹீரோ கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.