உள்ளூர் செய்திகள்

தொண்டி அருகே காரங்காடு பகுதியில் இயற்கையாக வளர்ந்துள்ள அலையாத்தி காடுகள்.

வறட்சிக்குள்ளாக்கும் காட்டுக்கருவேல மரங்கள்

Published On 2023-11-19 06:56 GMT   |   Update On 2023-11-19 06:56 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சிக்குள்ளாக்கும் காட்டுக்கருவேல மரங்கள்.
  • காட்டுக்கருவேல செடிகளை முற்றிலும் அழிக்க இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டிணம் என்று அழைக்கப்படும் சுந்தரபாண்டியபட்டி ணத்திலி ருந்து ராமநாதபுர மாவட்டத்தின் எல்லை தொடங்குகிறது. இதிலி ருந்து கடலோர கிராமமான திருப்பாலைக்குடி வரை கடற்கரையோரத்தில் வளரும் அரிய வகை மரங்களான மாங்குரோவ் வனம் கடலுடன் இணைந்து இயற்கை அன்னை தாலாட்டும் வகையில் ரம்மி யமாக காட்சியளிக்கிறது.

மலையிலும் நன்னீர் நிலத்திலும்தான் காடுகள் உருவாகும் என்ற நிலைக்கு மாற்றாக இப்பகுதியில் உப்புத்தண்ணீரில் வளர்வதுதான் அலையாத்தி காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள். முதலில் வளர்வதற்கு மழை நீரான நன்னீர் தேவைப்பட்டாலும் வளர்ந்த பின் கடலின் உப்பு நீரிலே தழைத்திருப்பது இயற்கை யின் அதிசயம். மேலும் மற்ற தாவரங்களைப்போல் இல்லாமல் இதன் வேர்கள் மேல் நோக்கியும் காணப்ப டுவது இயற்கையின் படைப்பில் மேலும் அதிசயமாக உள்ளது.கடலோர முகத்துவார பகுதிகள், உப்பங்கழிகள் ஆகியவை மாங்குரோவ் காடுகள் வளர்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது.இயற்கை பேரழி வான சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களி லிருந்து கடலோரங்களில் உள்ள மீனவ மக்களை காப்பாற்றுவதோடு, மீன்களின், பல்வேறு பறவை களின் இனப்பெ ருக்க மறைவு பகுதியாகவும் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மாங்குரோவ் காடுகளை பாதுகாப்பதில் அரசு மெத்தனப்போக்கை காட்டுவது வேதனை யளிப்பதாக உள்ளது.

இத்தகைய மாங்குரோவ் காடுகளின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சி வறண்ட நிலமாக மாற்றும் வகையில் காட்டுக் கருவேல செடிகள் களைகளாக மாங்குரோவ் காடுகளுக்குள் வளர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் காட்டுக் கருவேல செடிகள் படர்ந்து வளரத் தொடங்கியுள்ளன.

கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்து வளர்ந்து வரும் இந்த காட்டுக் கருவேல செடிகளினால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் எதிரே வரும் நான்கு சக்கர வாகனங்களை கவனித்து செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் பகலில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது அடர்ந்து வளர்ந்துள்ள காட்டுக் கருருவேல மரங்களின் மறைவிலிருந்து திடீரென வெளியே வரும் கால்நடைகளாலும் விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. மாவட்ட வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து கடலோர பகுதிகளை ஆய்வு செய்து அரிய வகை மாங்குரோவ் காடு களை பாதுகாக்கவும், நிலத்தடி நீரை உறிஞ்சும் காட்டுக்கருவேல செடி களை முற்றிலும் அழிக்க வும் இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News