உள்ளூர் செய்திகள்

நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்

Published On 2023-01-23 07:48 GMT   |   Update On 2023-01-23 07:48 GMT
  • நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடக்கிறது.
  • வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கீழக்கரை மற்றும் கமுதி வட்டங்களில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நீர்வளத்துறையினரால் அமைக்கப்பட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்க

ளுக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

நீரினை பயன்படுத் துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து நாளை (24-ந்தேதி) முதல் 27-ந்தேதி வரை (காலை 9 மணியில் இருந்து 4 மணி வரை) சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் வேட்பு மனுக்கள் பெறப்படும்.

இந்த வேட்புமனுக்கள் 28-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கூர்ந்தாய்வு செய்து, ஏற்கத்தக்க வேட்பு மனுக்களை சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். போட்டியில் இருந்து விலகிகொள்ள விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை 28-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் 28-ந்தேதி மாலை 5 மணிக்கு மேல் அறிவிப்பார். நீரினை பயன்படுத்துவோர் சங்கங் களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 5.2.2023 அன்று மாலை 4 மணி முதல் எண்ணத் தொடங்கி முடிவுகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

ராமநாதபுரம் வட்டம் சார்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவ லகத்திலும், பரமக்குடி வட்டத்திற்கு உதவி ஆட்சியர் அலுவலகத்திலும், பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருவாடானை வட்டத்தில் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திலும், கீழக்கரை வட்டத்தில் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்திலும், கமுதி வட்டத்தில் கமுதி வட்டாட்சியர் அலுவ லகத்தில் பெற்றுக் கொள்ள லாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News