உள்ளூர் செய்திகள்

தொண்டியில் மின்பாராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

மின் பராமரிப்பு பணி

Published On 2022-08-01 08:41 GMT   |   Update On 2022-08-01 08:41 GMT
  • தொண்டியில் மின் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
  • தொண்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பல இடங்களில் மின்கம்பிகள் கை தொடும் அளவிற்கு தாழ்வாக சென்றது. பல இடங்களில் மின் விநியோகம் செய்யப்படும் உயர் மின் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக சென்றது. மேலும் தொண்டி கடற்கரை பகுதியாக இருப்பதால் உப்புக்காற்று மற்றும் காற்றின் ஈரப்பதம் காரணமாக மின்கம்பங்கள் அரிப்பு ஏற்பட்டு பழுதடைந்திருந்தது.

இதனால் அசம்பாவி தங்கள் ஏற்ப டுவதை தடுக்கும் வகையில் தொண்டி மின்வாரிய அதிகாரிகளுடன் 4 மின் உதவி பொறியாளர்கள், 3 மின்பாதை ஆய்வாளர்கள், 2 சிறப்பு நிலை முகவர்கள், 52 கேங் மேன்கள், மதுரை மாவட்டம் விரகனூர், பனையூர், பெருங்குடி, கீழையூர் ஆகிய பகுதிகளி லிருந்து வந்து தொண்டியில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் ஊன்றியும், தாழ்வாக சென்ற மின் கம்பிகளை இழுத்து கட்டியும், தொய்வாக உள்ள மின் கம்பிகள் செல்லும் பகுதியில் இடையே புதிய மின் கம்பம் ஊன்றும் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் சீனிராஜன் கூறும்போது, 2 நாட்களாக மின் வாரிய ஊழியர்களின் பணி பாராட்டுதலுக்குரியது. தொண்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டது.

தொண்டியில் மின் பராமரிப்பு பணி 2 நாட்களில் முடிக்க முடியாது. தெருக்களின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்புகள் சிக்கலாக உள்ளது. வீடுகளுக்குச் செல்லும் இணைப்புகளில் விட்டுவிட்டு மின் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த மின் கம்பிகளை மாற்றி புதிய மின்வயர்கள் பொருத்த வேண்டும். அடிக்கடி இதுபோன்ற முகாம்கள் அமைக்கப்பட்டு மின் பழுதுகள் சரிசெய்ய பொதுமக்கள் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News