அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு கிடைக்க ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தல்
- அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு கிடைக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு கணிப்பாய்வு அலுவலர் வலியுறுத்தினார்.
- தொடர்ந்து திம்மநாதபுரம், கடலாடியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள்ள ப்பட்டு வருகின்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதில் அரசு முதன்மைச் செயலரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ் கலந்து கொண்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டி பணிகள் குறித்து துறை வாரியாக அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விவசாய பணிகள் தற்போது தொடங்கியு ள்ளதை முன்னிட்டு தேவை யான உரங்கள், விதைகள் இருப்பு உள்ளது. அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் பயனா ளிகளுக்கு முழுமையாக கிடைத்திட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாவட்டத்தில் நடந்து வரும் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து திம்மநாதபுரம், கடலாடியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.