உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவெற்றியூர் ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன் கோவில் தீர்த்தக்குளம் தூர்வாரப்படும் காட்சி.

தூர்வாரப்படும் பாகம்பிரியாள் அம்மன் கோவில் தெப்பக்குளம்

Published On 2023-10-01 08:23 GMT   |   Update On 2023-10-01 08:23 GMT
  • பாகம்பிரியாள் அம்மன் கோவில் தெப்பக்குளம் தூர்வாரப்படுகிறது.
  • தூர்வாரப்படுவதால் இப்ப குதி மக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவெற் றியூரில் மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமையானது மான சிவகங்கை சமஸ்தா னம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வல்மீக நாதர் சமேத ஸ்ரீ பாகம்பி ரியாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு தமிழகத் தின் பல்வேறு பகுதிகளிலி ருந்து பக்தர்கள் தினமும் சாமி கும்பிட வருகின்றனர். அதிலும் முன்தினம் கோவி லில் தங்கி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள வாசுகி தீர்த்தக்கு ளத்தில் நீராடிச் சென்றால் தீராத வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகி றார்கள்.

இந்நிலையில் இங்கு உள்ள தீர்த்தக்குளமான வாசுகி தீர்த்த தெப்பக் குளத்தில் தண்ணீர் அசுத்த மாகி அதிலிருந்த மீன்கள் இறந்து தெப்பக்கு ளம் மாசு ஏற்பட்டது. அதனைத்தொ டர்ந்து தேவஸ்தானம் நிர்வாகத்தின் மூலம் கெட் டுப்போன தண்ணீரை முழு மையாக வெளியேற்றி பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு வரு கிறது.

இப்பகுதியைச் சேர்ந்த குட்லக் ராஜேந்திரன் யூனி யன் சேர்மனாக இருந்த போது சுமார் 20 ஆண்டுக ளுக்கு முன் தூர்வாரப்பட் டது. அதன்பிறகு தற்போது தூர்வாரப்படுவதால் இப்ப குதி மக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

Tags:    

Similar News