உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் போலி இ-சேவை மையங்கள்

Published On 2023-07-12 07:16 GMT   |   Update On 2023-07-12 07:16 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் போலி இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.
  • மேலும் கட்டண தொகை விண்ணப்ப எண் விவரங் கள் அடங்கிய ஒப்புகை சீட் டும் வழங்குவதில்லை.

அபிராமம்

ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள தாலுகாக்கள், யூனியன் அலுவலகம், நகராட்சி, பேருராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் பொது இ-சேவை மையம், தமிழ்நாடு அரசு கேபில் டி.வி. கார்ப்பரேசன், கூட்டுறவு கடன் சங்கம், மகளிர் திட்டம் உள்பட சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்படுகிறது.

இந்த மையங்கள் மூலமாக வருமானச் சான்று, இருப்பிட சான்று, சாதி, முதல் பட்டாதாரி, விதவை சான்று உள்பட அனைத்து சான்றுகளுக்காக விண்ணப்பிக்க பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களுக்கு செல்கின்றனர்.

இம்மையங்களில் அரசு நிர்ணயித்துள்ள. பெரும் பாலன சேவைகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டண மாக ரூ.60 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆனால் அபிராமம், கமுதி, கடலாடி சாயல்குடி பகுதியில் உள்ள பெரும் பாலான இடங்களில் கம்யூட் டர் சென்டர், ஜெராக்ஸ் கடை வைத்துள்ள பலர் உரிய அங்கிகாரம் பெறாமலேயே இ-சேவை மையம் செயல்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அரசு துறை சான்று களுக்கு விண்ணப்பிக்க ஆதார் விவரங்களுடன் பொதுமக்கள் கணக்கு எண் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. எவ்வித பயிற்ச்சிகளும் இல்லாததல் அங்கீகாரம் பெறாத இ-சேவை மையத்தினர். கணக்கு எண் உருவாக்க தகவல் களை தவறாக பயன் படுத்துகின்றனர். அதன்பின் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவரின் ஆதார் எண்ணை பெற்று மீண்டும் கணக்கு எண் உருவாக்குகின்றனர்.

ஒருவருக்கு உருவாக்கப் பட்ட இந்த எண்ணை பயன்படுத்தி தங்கள் மையத்தை நாடிவரும் வெவ்வேறு நபர் களுக்கு சான்றுபெற விண்ணப்பிக்கின்றனர். மேலும் கட்டண தொகை விண்ணப்ப எண் விவரங் கள் அடங்கிய ஒப்புகை சீட் டும் வழங்குவதில்லை. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமுக ஆர்வலரிடம் கேட்டபோது:-

இந்த பகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி ஆதலால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இ-சேவை மையம் எது என்று தெரியாமல் கம்யூட்டர் கடை வைத் திருக்கும் கடைக்கு செல்வதால் அதை சாதகமாக பயன்படுத்தி கடை உரிமை யாளர்கள் சான்றிதழுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதுடன் சான்றிதழும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் காலதாமதமும் ஏற்படுகிறது. இந்த நிலையை போக்க சமந்தப்பட்ட துறையினர் காண்காணிக்கவேண்டும் என்றார்.

Tags:    

Similar News