- ராமநாதபுரத்தில் சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடுவோரை காப்பாற்றுவோருக்கு மத்திய அரசு விருது அளிக்கும்.
- உயிரைக் காப்பாற்றுவோருக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சாா்பில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களது உயிரைக் காப்பாற்றுவோருக்கு பரிசுகள், பாராட்டு ச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. பரிசு, பாராட்டுச் சான்றுகள் மூலம் சம்பந்தப்பட்டோரை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்ற முதலுவி சிகிச்சை அளித்தல், பொன்னான நேரத்திற்குள் (கோல்டன்ஹவா்) மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தல் ஆகியவற்றின் மூலம் விருதுக்கு சம்பந்தப்பட்டோா் தகுதியானோராக கருதப்படுவாா்.
விருதானது ஒரு சம்பவத்துக்கு ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றும் வழங்கப்படும். ஓராண்டில் ஒருவருக்கு 5 முறைகள் இந்த விருதுகள் வழங்கப்படலாம். விருதுக்கானவா்களை ஆண்டுதோறும் செப்டம்பருக்குள் மாநில அளவிலான கண்காணிப்புக்குழு, தேசிய அளவிலான விருதுகளுக்கு தகுதியான 3 பேரை பரிந்துரைக்கும்.
அதனடிப்படையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையால் தோ்வாகும் 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசளிக்கப்படும். இந்தத் திட்டம் வரும் 2026 மாா்ச் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். ஆகவே திட்டத்தைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்றி, உயிரைக் காக்க உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.