உள்ளூர் செய்திகள்

கோடை காலத்தில் விவசாயிகளுக்கு பலன் தரும் கரிமூட்டதொழில்

Published On 2023-04-26 07:58 GMT   |   Update On 2023-04-26 07:58 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் விவசாயிகளுக்கு கரிமூட்டதொழில் பலன் தருகிறது.
  • இந்த தொழிலில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் ஒரளவுக்கு லாபம் கிடைக்கும் என்றார்.

அபிராமம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம் உள்பட பல்வேறு பகுதிகளில் விறகுகட்டை மற்றும் கரிமூட்ட தொழில் நடக்கிறது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.

கமுதி மற்றும் அபிராமத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் குளங்கள், கண்மாய்கள், ஊரணிகள் வரத்துக் கால்வாய்கள், தனிநபர் பட்டா நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி எடுத்து அந்த கட்டைகளை திருப்பூர் போன்ற சாயபட்டறைக்கு அனுப்புகின்றனர். மேலும் இந்த கட்டைகளை பயன்படுத்தி கரிமூட்ட தொழிலும் செய்து வருகின்றனர்.

சீமை கருவேல மரங்களை வெட்டி எடுத்து பெரிய கட்டை விறகுகளை திருப்பூர், கோவை, பல்லடம் போன்ற சாயப்பட்டறை களுக்கு லாரிகள் மூலம் ஏற்றி விற்பனை செய்யப் படுகிறது. எஞ்சிய சிறிய குச்சிகளை வெட்டி அடுக்கி அவற்றை கரிமூட்டம் போட்டுவுடன் வெளி மாநிலங்களுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து அபி ராமத்தை சேர்ந்த விறகு வெட்டுபவர் கூறுகையில், தற்போது கோடைகாலம் என்பதால் மாற்று தொழிலாக விறகுவெட்டும் தொழிலும், கரிமூட்டம் தொழிலும் செய்து வருகிறோம். கோடை காலத்தில் மிளகாய், பருத்தி போன்ற பயிர்களை விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாததால் விறகு வெட்டும் தொழிலை செய்து வருகிறோம்.

இந்த தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் ஒரளவுக்கு லாபம் கிடைக்கும் என்றார்.

Tags:    

Similar News