- ராமநாதபுரத்தில் டீ கடைக்காரருக்கு நிதிஉதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
- டோனி, ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் டீக்கடை வைத்தி ருப்பவர் சிவலிங்கம். இவர் நேற்று வழக்கமாக கடை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இரவில் பெய்த கன மழை காரண மாக இவரது கடைக்கு அருகில் இருந்த மரம் ஒன்று சாய்ந்து டீக்கடையில் விழுந்தது.
இதில் இந்த கடை முற்றி லும் சேதமடைந்தது. இது குறித்து முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜ கண்ணப்பனுக்கு தெரிய வந்ததை அடுத்து பாதிக்க பட்ட சிவலிங்கத் திற்கு நிதிஉதவி வழங்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், தலைமையில் கமுதி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடுத்த நிதியுதவியை வழங்கினர்.அருகில் பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.