மாணவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டி
- மாணவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் பெரியபட்டினம் அரசு பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- இஸ்லாமியா பள்ளி 2-வது இடத்தை பிடித்தது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கல்வி மாவட்டம் கீழக்கரை குறு வட்டம் பகுதியைச் சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கி டையேயான கால்பந்தாட்ட போட்டிகள் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரியர் டேவிட் மோசஸ் தலைமையில் நடந்தது.
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி துணை முதல்வர் செந்தில்குமார் கால்பந்தாட்ட போட்டியை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு இடையேயான போட்டிகளில் 12 பள்ளி அணிகள் பங்கேற்று விளையாடின.
இதில் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடமும், கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடமும் பெற்றன.
மாணவிகளுக்கு இடையேயான போட்டியில் 6 பள்ளி அணிகள் பங்கேற்றன. இதில் கீழக்கரை வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி அணி முதலிடமும், சாத்தான்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடம் பெற்றன. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் அணிக்கு கல்லூரி முதல்வர் முஹம்மது ஷரிப் பரிசு கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார், தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தீபா, எஸ்தர் மற்றும் வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.