- இரவு காவலாளியின் மண்டை உடைந்தது.
- ேபாலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கீழக்கரை
நேபாள நாட்டை சேர்ந்தவர் நரேன் குமார் சஞ்சேல் (வயது 43). இவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெரு பகுதியில் இரவு காவலாளியாக (கூர்க்கா) உள்ளார்.
கண்ணாடி வாப்பா தர்கா செல்லும் சாலையில் ரோந்து சென்றார். அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் கூர்க்கா நரேன் குமாரை வழிமறித்து மிரட்டி வழிப்பறி செய்ய முயன்றனர். இதில் ஏற்பட்ட தகராறில் நரேன்குமாரின் கட்டையால் தாக்கியதில் மண்டை உடைந்தது.
அவர் கூச்சலிட்டதும் அக்கம், பக்கத்தினர் கூர்க்காவை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், இது குறித்து கீழக்கரையை சேர்ந்த சதாம் உசேன் (31), முகம்மது கான் (28), பைசல் கான் (32), முகம்மது ஆதம் (30), ஜாவித் (22), அபுபக்கர் சித்திக் (24) ஆகியோர் மீது கீழக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 6 பேரையும் தேடி வருகின்றனர்.
கீழக்கரை நகர் பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொள்ளாததால் அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். கீழக்கரை நகரில் இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ள ேபாலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.