- ராமநாதபுரம் மாவட்டத்தில், நாளை 429 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்கிறது.
- இதில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்யலாம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை (26-ந் தேதி) அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தை ஒப்பிட்டு விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிரதமரின் குடியிருப்பு திட்ட பயனாளிகள் குறித்து விவாதித்தல். அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் போன்ற பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.