500 மதுக்கடைகளை மூடும் முடிவுக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு
- 500 மதுக்கடைகளை மூடும் முடிவுக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்றுள்ளது.
- முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ராமநாதபுரம்
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம். எல். ஏ. கூறியதாவது:-
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டமன்றப் பேரவை யில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 500 மது கடைகளைக் கண்டறிந்து அதனை மூட அரசாணை வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
தற்போது மூடப்பட்டுள்ள 500 மது கடைகள் மட்டுமின்றி தமிழகம் மதுவில்லா மாநிலமாகத் திகழ முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுக்கடைகள் மூடப்படும் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டால் அந்த விற்பனையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.