முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா
- கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை துறைத்த லைவர்கள் முனைவர் சேக் யூகம் மற்றும் முனைவர் கார்த்தியாயினி செய்திருந்த னர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்க ளுக்கான வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி திட்டமிடல் அதிகாரி முனை வர் திராவிடச்செல்வி வர வேற்றார்.
விழாவில், சிறப்பு விருந் தினராக தனியார் டி.வி. புகழ் மதுரை முத்து கலந்து கொண்டு பேசியதாவது:-
மாணவர்கள் நேர்மறை யான சிந்தனையு டன் கல்வி பயின்று அதன்மூலம் சிறந்த வேலைவாய்ப்பினை பெற்று வீட்டிற்கும், நாட்டிற் கும் பெருமை சேர்க்க வேண்டும். வாழ்க்கையை கஷ்டப்பட்டு வாழாமல் இஷ்டப்பட்டு எந்த செயலை யும் செய்தால் தான் அதில் வெற்றியடைய முடியும்.
வாழ்க்கையில் சிரிப்பதற் கும் நேரம் ஒதுக்குங்கள், அப்பொழுது தான் ஆரோக் கியமான உடல் நலத்துடன் வாழ முடியும். தங்களை பெற்ற தாய், தந்தையரை வயதான காலத்தில் அவர்க ளுக்கு உறுதுணையாக இருப்பது அனைவருடைய அத்தியாவசிய கடமை. அதை நாம் அனைவரும் மனதில் நிலை நிறுத்த வேண்டும் என்றார்.
கல்லூரியின் முன்னாள் மாணவி பத்மபிரியா பேசு கையில், நான் இந்த கல்லூரி யில் படிக்கும்போது எனக்கு பேராசிரியர்கள் ஊக்கத்து டனும், தன்னம்பிக்கையுட னும் கூடிய கல்வியை கற்று தந்ததனால் நான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். ஆகவே மாணவர்களாகிய நீங்கள் உங்களது பேராசிரி யர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றி வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றார்.முன்னாள் மாணவர் ராஜேஷ் குமார் பேசுகையில், இன்று முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பை துவங்க உள்ள மாணவர்கள் அனைவரும் செய்முறை பயிற்சியுடன் கூடிய கல்வி தான் உங்களுக்கு வேலை வாய்ப்பை பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும். ஆகவே நீங்கள் புரிந்து படித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இயற்கைக்கு உகந்த புதுமையான கண்டு பிடிப்புகளை உருவாக்கி நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் 15 குழுக் களாக பிரிந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் பல ஆராய்ச்சி படைப்புகளை கண்காட்சியாக வைத்திருந்த னர். இதனை விழாவில் பங்கேற்ற பெற்றோர்கள், மாணவர்கள், விருந்தினர் கள் பார்வையிட்டு மாண வர்களை பாராட்டினர்.
இதில் முஹம்மது சதக் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூ ரிகள், பள்ளிகளின் முதல் வர்கள் சேக் தாவூத், ராஜ சேகர், சோமசுந்தரம், சேகர், ஆலியா, சுமதி மற்றும் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியின் டீன் முனை வர், செல்வபெருமாள், அனைத்து துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள், முதலாமாண்டு மாணவர் கள் அவர்களின் பெற்றோர் கள் அனைவரும் கலந்து கொண்டனர். கல்லூரியின் முதலாம் ஆண்டு துறைத்த லைவர் முனைவர் கணேசன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை துறைத்த லைவர்கள் முனைவர் சேக் யூகம் மற்றும் முனைவர் கார்த்தியாயினி செய்திருந்த னர்.