உள்ளூர் செய்திகள்

 பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட இயற்கை கரிம உரங்கள் விற்பனையை கலெக்டர் சங்கர்லால் குமாவத் தொடங்கி வைத்தார்.

தங்கச்சிமடம் ஊராட்சிக்கு ஊக்கத்தொகை

Published On 2022-06-06 09:21 GMT   |   Update On 2022-06-06 09:21 GMT
  • பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்த தங்கச்சிமடம் ஊராட்சிக்கு ஊக்கத்தொகையை ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.
  • கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மாபெரும் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.

இதை கலெக்டர் சங்கர்லால் குமாவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அரிச்சல்முனையில் கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டி னை தவிர்த்து கடல் உயிரினங்களை பாது காக்க கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு மணல் சிற்பத்தை பார்வையிட்டார்.

பின்னர் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மாபெரும் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தங்கச்சிமடம் கிராமத்தில் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் வனத்துறை மூலம் கடற்கரை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக தங்கச்சிமடம் ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.

பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு ஒப்படைத்தற்காக தங்கச்சிமடம் ஊராட்சி சார்பில் ரூ. 10 ஆயிரத்திற்க்கான காசோலை வனத்துறைக்கு வழங்கப்பட்டது. தூளாக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை விற்பனை செய்ததற்காக ரூ. 20 ஆயிரத்திற்கான காசோலை தங்கச்சிமடம் ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. மேலும் பாம்பன் ஊராட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட இயற்கை கரிம உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்தநிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், வன உயிரினகாப்பாளர் ஜக்தீஷ்பகான் சுதாகர், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக்மன்சூர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன், ராமேசுவரம் வட்டாட்சியர்கள் மார்ட்டின், அப்துல்ஜபார், மாவட்டசுற்றுலாஅலுவலர் வெங்கடாச்சலம், ராமேசுவரம் நகராட்சி ஆணையாளர் மூர்த்தி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கணேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News