உள்ளூர் செய்திகள்

அதிகரிக்கும் தெரு நாய்கள் தொல்லை

Published On 2023-07-19 07:34 GMT   |   Update On 2023-07-19 07:34 GMT
  • தெரு நாய்கள் தொல்லை அதிகரிக்கிறது.
  • இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் அதிகரித் துள்ளது. பகல், இரவில் நாய்கள் கூட்டமாக குடியி ருப்புகளில் வலம் வந்து அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தற்போது நாய்களுக்கு இனப்பெருக்கத்திற்கான காலம் என்பதால் இணைகளை தேடி வெளியிடங்களில் இருந்து நகருக்குள் அதிகம் சுற்றித் திரிகிறது.

இறைச்சி கடைகளை சுற்றியும் கூட்டமாக திரிகின்றன. குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் தெரு நாய்கள் குழந்தைகள், வயதானவர்களுக்கு அதிக பாதிப்பை தருகிறது. மெயின் ரோட்டில் திடீரென்று குறுக்காக வரும் தெரு நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அடிக்கடி விபத்து ஏற்படுத்துகிறது.

தெரு நாய்கள் தொல்லை தருவதாக இருந்தாலும் அதனை அப்புறப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் உள்ளாட்சி நிர்வாகத்தினர், தன்னார் வலர்கள் யாரும் முன் வருவதில்லை. தற்போது நாய் கள் எண்ணிக்கை பெருகி விட்டது. தெரு நாய்களுக்கான கருத்தடை ஆபரேஷன்களை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வா கங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

Tags:    

Similar News