உள்ளூர் செய்திகள்

சுகாதார கணக்கெடுப்பு பணி தொடக்கம்

Published On 2023-10-06 08:06 GMT   |   Update On 2023-10-06 08:06 GMT
  • தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதுகுளத்தூர்

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்ச கத்தின் வழிகாட்டுதலின் பேரில் மக்களியல் ஆராய்ச்சி மையம், திண்டுக்கல் காந்தி கிராமம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைந்து நடத்தும் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி லும் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார கணக்கெடுப்பு பணி தொடங்கியது. பேரூ ராட்சி தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மாலதி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, கருணாகரசேதுபதி, கிராமப்புற செவிலியர்கள் இந்திரா, சந்தியா மற்றும் களப்பணியாளர்கள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

இதில் குடிநீர் வடிகால், வீட்டின் தன்மை, மக்களின் வாழ்வியல், தாய் சேய் நலம், குழந்தை பிறப்பு, இறப்பு, தடுப்பூசி, ஊட்டச்சத்து, கருவறுதல், குடும்ப கட்டுப் பாடு சேவைகள், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, சுகா தாரம் மற்றும் சமூக நல திட்டங்களின் மதிப்பீடு பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

இந்த பணிகள் 4 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News