புதிய வாரச்சந்தை வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
- முதுகுளத்தூரில் புதிய வாரச்சந்தை வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதற்கான டெண்டர் விடப்பட்டு வாரச்சந்தை கட்டி முடிக்கப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகே ரூ.2.42 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தை வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதற்கான டெண்டர் விடப்பட்டு வார சந்தை கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால் 6 மாதங்கள் ஆன பின்பும் வாரச்சந்தை திறக்கப்படாமல் உள்ளது. முதுகுளத்தூரை சுற்றி 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு வார சந்தைக்கு வருவது வழக்கம். இதனால் முதுகுளத்தூர், அபிராமம், கமுதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயனடைந்து வருகின்றனர்.
தற்போது முதுகுளத்தூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் வியாழக் கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்கப்படு வதாகவும், இதனால் அரசின் நிதி வீணடிக்கப் படுவதாகவும் மழைக் காலங்களில் இந்த வாரச்சந்தைைய பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், மேலும் அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமப்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் புதிய வாரச் சந்தை வளாகத்தை உடன டியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வரு கின்றனர்.இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இதுகுறித்து எடுத்துக்கூறியும் நடவடிக்கை எடுக்கப்படா மல் உள்ளதாகவும், மழைக் காலம் தொடங்க உள்ளதால் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடன டியாக புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வாரச்சந்தை வளாகத்தை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.