உள்ளூர் செய்திகள்

மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரம் வழக்குகளுக்கு தீா்வு

Published On 2022-06-22 09:35 GMT   |   Update On 2022-06-22 09:35 GMT
  • ராமநாதபுரத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரம் வழக்குகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்த தகவலை மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

நடப்பு ஆண்டின் 2-வது மக்கள் நீதிமன்றமாக இது நடைபெற உள்ளது. ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூா், கமுதி, திருவாடானை, ராமேசுவரம் ஆகிய நீதிமன்ற வளாகங்களில் 11 அமா்வுகளாக விசாரணை நடைபெறும். மொத்தம் 3 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் உள்ள வாராக்கடன் வழக்குகள், தொழிலாளா்கள் இழப்பீடு, சிறிய குற்ற வழக்குகள், குடும்ப வழக்குகள், சொத்து வழக்குகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. இதில் முடிக்கப்படும் வழக்குகளில் மேல்முறையீடு கிடையாது. இதனால் காலம், பணம் மிச்சப்படுகிறது.

வழக்குகளுக்காக செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணம் முழுமையாகத் திரும்ப வழங்கப்படும். இரு தரப்பினருக்கும் வெற்றி, தோல்வியின்றி சமரசமாகவே வழக்குகள் முடிக்கப்படுகின்றன.

இதை வழக்கறிஞர்கள், சம்பந்தப்பட்ட பொதுமக்களும் பயன்படுத்தி, வழக்குகளை முடித்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, மாவட்ட சாா்பு-நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலருமான கதிரவன் உடனிருந்தார்.

Tags:    

Similar News