காளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா
- காளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
- 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் பங்குனி பொங்கல் திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் காப்புகட்டி விரதத்தை தொடங்கினர். தினமும் அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடந்தன. முக்கிய நாளான நேற்று அதிகாலை அக்னிச்சட்டி திருவிழா நடந்தது. இதில் 300-க்கு மேற்பட்ட பத்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமானோர் மாவிளக்கு எடுத்தும், மொட்டையடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை கோவில் முன்பு முளைப்பாரியை வைத்து பெண்கள் பாட்டு பாடி, கும்மி அடித்தனர். பின்னர் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். கோவிலில் இருந்து தொடங்கிய முளைப்பாரி ஊர்வலம் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வானவேடிக்கை, மேள தாளங்களுடன் நகர் வலம் வந்து கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனர்.