உள்ளூர் செய்திகள்

பசுமை காலநிலை நடவடிக்கை குழு அமைப்பதற்கான கூட்டம்

Published On 2023-05-04 08:07 GMT   |   Update On 2023-05-04 08:07 GMT
  • பசுமை காலநிலை நடவடிக்கை குழு அமைப்பதற்கான கூட்டம் கீழக்கரையில் நடந்தது.
  • குறுங்காடு சிறப்பாக வளர்க்கும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கீழக்கரை

பசுமைத் தாயகத்தின் சார்பில் பசுமை காலநிலை நடவடிக்கை குழு அமைப்பதற்கான கூட்டம் கீழக்கரையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் கர்ண மகாராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திருஞானம் முன்னிலை வகித்தார். பா.ம.க. மாவட்ட செயலாளர் அக்கிம், மாவட்ட தலைவர் சந்தன தாஸ், அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் பேசினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும், அனைத்து ஊரணிகளில் வைகை நீரை கொண்டு வந்து நீர் நிலைகளை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராமநாதபுரம் நகரச் செயலாளர் பாலா, கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, பசுமை தாயகத்தின் மாவட்டத் துணை தலைவர் புஷ்பராஜ், துணைச்செயலாளர் பசும்பொன் ரமேஷ், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், தலைவர் சரீப், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர். குறுங்காடு சிறப்பாக வளர்க்கும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News