உப்பூர் அருகே மினி மாரத்தான் போட்டி
- உப்பூர் அருகே மினி மாரத்தான் போட்டி நடந்தது.
- ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் அருகே ரோட்டரி கிளப்ஆப் கோல்டன் மற்றும் உப்பூர் அமிர்தாஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை நடத்தியது.
ரோட்டரி கிளப் தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். கலங்காப்புலி விலக்கு ரோட்டில் இருந்து தொடங்கிய போட்டியை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் அமிர்தாஸ் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 5 கிலோ மீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில் வரை சென்று நிறைவடைந்தது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இதில் பள்ளியின் திட்ட சேர்மன் ஜான்பிரிட்டோ, பள்ளி தாளாளர் அன்புமலர் பாண்டியன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.