உள்ளூர் செய்திகள் (District)

கீழக்கரை கடற்பகுதி.

கீழக்கரை கடற்பகுதி ரேடார் மூலம் கண்காணிப்பு

Published On 2022-08-19 09:24 GMT   |   Update On 2022-08-19 09:24 GMT
  • கீழக்கரை கடற்பகுதியில் ரேடார் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் இலங்கை எல்லை வரை கண்காணிக்க முடியும்.

கீழக்கரை

தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் பலத்த எதிர்ப்பையும் மீறி இலங்கையில் சீன உளவு கப்பல் 'யுவான் வாங் 5' ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கீழக்கரை கடற்கரை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மேலே பொருத்தப்பட்டுள்ள ரேடார் கருவி மூலமும், மன்னார் வளைகுடா கடல் பகுதி மற்றும் இந்திய கடல் எல்லை வரையிலும் வரும் படகுகள், ஹெலிகாப்டர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கீழக்கரை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. கீழக்கரை கடற்கரையோரம் உள்ள கலங்கரை விளக்கத்தில் நவீன கண்காணிப்பு ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் இலங்கை எல்லை வரை கண்காணிக்க முடியும். இங்கிருந்து கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News