உள்ளூர் செய்திகள்

மதநல்லிணக்க முளைப்பாரி ஊர்வலம்

Published On 2023-08-03 06:30 GMT   |   Update On 2023-08-03 06:30 GMT
  • மதநல்லிணக்க முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
  • விழாவிற்கான ஏற்பாடுகள் தேவேந்திரர்குல வேளாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தேவேந்திரர் நகரில் அமைந்துள்ள வாழவந்தாள் மாரியம்மன் கோவில் 29-ம் ஆண்டு முளைக்கொட்டு திருவிழா கடந்த 25-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

தினமும் இரவு ஆண்கள் ஒயிலாட்டமும், பெண்கள் கும்மியடித்து முளைப்பாரி வளர்த்தனர். செவ்வாய்க் கிழமை இரவு கரகம், அக்னி சட்டி எடுத்தும், புதன் கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனையடுத்து ஆண்கள் ஒயிலாட்டமும், பெண்கள் கும்மியடித்து பின் தேவேந்திரர் நகர் அம்மன் சன்னதியில் தொடங்கி முஸ்லீம் தெரு வழியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்கா வினுள் நுாற்றுக்கணக்கான முளைப்பாரிகளை சுமந்து சென்ற பக்தர்களுக்கு, ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது.

தர்காவின் முன்புறம் பாரிகள் இறக்கி வைக்கப் பட்டு, கும்மி அடிக்கப் பட்டது. 3 முளைப்பாரிகளை தர்காவின் உள்ளே மக்பரா அமைந்துள்ள இடத்தில் வைத்து உலக நன்மைக் காகவும், நல்ல மழை வளம் வேண்டியும் (பாத்தியா) சிறப்பு துஆ ஓதினர்.

பின்னர் தர்காவை 3 முறை முளைப்பாரி சுமந்து வலம் வந்தனர். முடிவில் சின்ன ஏர்வாடி கடற்கரையில் முளைப்பாரிகளை கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவிற்கான ஏற்பாடு கள் தேவேந்திரர்குல வேளாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News