உள்ளூர் செய்திகள்

பல்நோக்கு கடல்பாசி பூங்கா: மத்திய மந்திரி அடிக்கல்

Published On 2023-09-03 05:22 GMT   |   Update On 2023-09-03 05:22 GMT
  • ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடல்பாசி பூங்கா அமைக்க மத்திய மந்திரி அடிக்கல் நட்டார்.
  • ஆண்டுதோறும் 1000 நபர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம்,வழமாவூரில் மீன்வளத்துறையின் மூலம் பல்நோக்கு கடல்பாசி பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி முருகன் முன்னிலை வகித்தார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமை தாங்கி ரூ.127.71 கோடி மதிப்பீட்டில் அமைய வுள்ள பல்நோக்கு கடற்பாசி பூங்காவுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி மீன்வளத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை வழங்கி பொருளாதார முன்னேற்றம் பெரும் துறைகளில் ஒன்றாக மீன்வளத்துறை இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சி யாக சாகர் பரிக்ரமா கடல்பயணம் திட்டம் துவங்கப்பட்டு கடல் மார்க்கம் வழியாக மீனவ மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் நிறைவேற்றும் வகையில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ராமேசுவரம் கடற்கரை ஒட்டிய மீனவ மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.127.71 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் தான் துவங்கப்பட்டுள்ளது.என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.இத்திட்டத்தின் மூலம் 6 மாவட்ட மீனவர் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் மீன்வளத் துறையின் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.38 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி நலத் திட்டங்கள் வழங்கப்பட் டுள்ளது.

விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு பயன் பாட்டில் உள்ளது போல் மீனவர்களுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 374 பேர் இத்திட்டத்தில் பதிவு செய்து அவர்களுக்கு ரூ.4,71,000/- நிதியுதவி வழங்கப்பட்டு பயன்பெற்று வருகிறார்கள்.இதை மேலும் விரிவுபடுத்தி ஆண்டுதோறும் 1000 நபர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து 10 பயனாளிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகளை மத்திய அமைச்சர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை இணைச்செயலாளர் நீத்துப்பிரசாத்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி, மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், பா.ஜ.க மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News