உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரத்தில் தேசிய மாநாடு

Published On 2022-12-16 08:22 GMT   |   Update On 2022-12-16 08:22 GMT
  • ராமநாதபுரத்தில் தேசிய மாநாடு இன்று மாலை தொடங்குகிறது,
  • வருகிற 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

ராமநாதபுரம்

முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரில் காமராஜர் பவுண்டேசன் ஆப் இந்தியா என்ற பெயரில் அமைப்பு இயங்கி வருகிறது. இதன் நிறுவனத் தலைவரும், கேரள முன்னாள் அமைச்சருமான நீல லோகிததாசன் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் அமைப்பு சார்பில் 46-வது தேசிய மாநாடு ராமநாதபுரத்தில் இன்று மாலை (16-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இன்றைய அரசியலுக்கு காமராஜரின் அரசியல் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் நடவடிக்கைகள் அவசியம் என்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், காமராஜரின் புகழை பரப்புதல் மற்றும் கல்வி மருத்துவ முகாம், மருத்துவ சேவை மற்றும் இன்றைய இளைய தலைமுறையினரிடையே காமராஜரின் புகழை பரப்பும் நோக்கத்திலும் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.

காமராஜ் பவுண்டேசன் ஆப் இந்தியா தேசிய செயலாளர் சேதுராமன், மாநாட்டு ஏற்பாட்டு குழு செயலாளர் நற்றமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் குகன், ஒருங்கிணைப்பாளர் சம்சுல் கபீர், இணைச் செயலாளர் அப்துல் பாசித், முருகேசன், அபுதாகிர், முஜம்மில், மருதுபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News