உள்ளூர் செய்திகள்

தேசிய விளையாட்டு விழா

Published On 2023-08-31 07:16 GMT   |   Update On 2023-08-31 07:16 GMT
  • தேசிய விளையாட்டு விழா நடந்தது.
  • நலப்படுத்திட்ட அலுவலர்கள் சுலைமான், சதாம் உசேன், முனிய சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

கீழக்கரை

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இந்திய தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கி பேசுகையில், இந்தியாவின் சிறந்த ஆக்கி வீரராக திகழ்ந்த தயான்சந்த் நினைவாக அவரது பிறந்த நாளான ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் விளையாட்டு வீரர்களை கவுரவிக்க அர்ஜுனா விருது, ராஜிவ் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சதுரங்கம், வாலிபால், டேபிள் டென்னிஸ், யோகா, கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம், நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர்கள் சுலைமான், சதாம் உசேன், முனிய சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News