உள்ளூர் செய்திகள்
இயற்கை பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- கமுதி அருகே இயற்கை பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பூக்குளம் கிராமத்தில் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இயற்கை பேரிடர் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியை செல்வின் சாக்ரோஸ் முன்னிலை வகித்தார். கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் இயற்கை பேரிடர் கள் குறித்தும், மாணவ- மாணவிகள் தங்களை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும், பொதுமக்களை எப்படி காப்பாற்ற வேண்டும், எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.
இதில் தீயணைப்பு வீரர்கள் உத்தண்ட சாமி, நாகச்சந்திரன், காந்தி, தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் சின்ன உடப்பங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியிலும் மாணவர்களுக்கு பேரிடர் விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.