ஓ.பி.எஸ். அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள்
- ஓ.பி.எஸ். அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
- பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்-மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் அறிவுறுத்தலின்படி எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடந்தது. ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர்-வழக்கறிஞர் முத்துமுருகன் ஏற்பாட்டில் மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பேரவை செயலாளர் கவிஞர் ராமநாதன், ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோட்டைசாமி, ராமநாதபுரம் நகர் செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். பாரதி நகரில் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் நாரல் ஊராட்சி செயலாளர் நாரல் சுரேஷ், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முத்துப்பாண்டியன், சத்துணவு பாஸ்கர், கழுகூரணி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பூபதி, புத்தேந்தல் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கல்யாணி, தெற்குதரவை கிளை செயலாளர் திருமுருகன், சண்முகநாதன், சக்கரைக்கோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆர்.எஸ்.மடை யுவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் நகர் சார்பில் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.