உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மண்டபம் முகாமில் வசித்து மரணமடைந்த 9 இலங்கை தமிழர்களின் வாரிசுதாரர்களிடம் உதவித்தொகையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார். 

258 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

Published On 2023-02-28 08:36 GMT   |   Update On 2023-02-28 08:54 GMT
  • மக்கள் குறைதீர்க்கும் நாளில் 258 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு அளிக்கப்பட்டது.
  • ரூ.6,200 மதிப்புள்ள புத்தகங்களை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் மாணவிகளுக்கு வழங்கினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

இதில் கலெக்டர் பொது மக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 258 மனுக்களை பெற்று மனு தாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

இந்த கூட்டத்தில் வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் வசித்து, மரணமடைந்த 9 இலங்கைத்தமிழரின் வாரிசுதாரர்களிடம் ஈமச்சடங்கிற்கான உதவித் தொகையாக தலா ரூ.5ஆயிரம் வீதம் ரூ.45 ஆயிரத்துக்கான காசோலை களையும், ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், குருவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிற மாணவிகள் பாக்யஸ்ரீ, காவியா ஆகியோருக்கு இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி ஆகிய பணிகளுக்கான கனவிற்கு உரம் ஊட்டும் விதத்தில் படிப்பதற்கு ஏதுவாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் ரூ.6,200 மதிப்புள்ள புத்தகங்களை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் மாணவிகளுக்கு வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராணய சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், தனித்துணை ஆட்சியர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் குருசந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News