உள்ளூர் செய்திகள்

முகாமில் உதவி கலெக்டர் நாராயண சர்மா, மாற்றுத்திறனாளி சிறுமிக்கு சக்கர நாற்காலி வழங்கினார்.



 


சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம்-கலெக்டர்

Published On 2022-11-27 08:39 GMT   |   Update On 2022-11-27 08:39 GMT
  • ராமநாதபுரம்: சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் கூறினார்.
  • உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா தலைமை தாங்கினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்று த்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ராமநாத புரம் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா தலைமை தாங்கி 210 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.

அவைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா பேசும்போது கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகின்றன. அடையாள அட்டை பெறாதவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தில் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்ப டுகிறது. தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இதுபோன்ற சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு உபகரணங்கள் வேண்டுபவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி பயில்வோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டமும் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்க ளுக்கு தேவையான பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வரு கின்றன. தகுதியுடைய பயனாளிகள் இதுபோன்ற அரசின் திட்டங்களை விண்ணப்பித்து பெறலாம்.

இதேபோல் தண்டு வடம் பாதித்த மாற்றுத்திற னாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படு கிறது. மேலும் உயர் சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் அவ்வப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், ஊன்றுகோல், கருப்பு கண்ணாடி, காதொலி கருவி, செயற்கைகால் மற்றும் கடிகாரம் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் இதுபோன்ற சிறப்பு முகாம் மற்றும் தங்கள் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாம் ஆகியவற்றில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு உடல் ஆரோக்கி யத்தை பாதுகாத்து கொள்ளுவதுடன் அரசின் திட்டங்களையும் பெற்று பயன்பெற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், ஆனந்த சொக்கலிங்கம், கார்த்திகேயன், சுபா சங்கரி, முட நீக்கியல் வல்லுநர் ஜெய்சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News