பிளஸ்-2 தேர்வு முடிவு: மாநில அளவில் 12-வது இடம்பெற்ற ராமநாதபுரம் மாவட்டம்
- பிளஸ்-2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 12-வது இடம்பெற்றது.
- கடந்த ஆண்டு வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இந்த ஆண்டு ராமநாதபுரம் பின்னடைவை சந்தித்துள்ளது.
ராமநாதபுரம்
தமிழகம் முழுவதும் பிளஸ் -2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் 6790 பேரும், மாணவிகள் 7516 பேரும் என மொத்தம் 14306 பேர் தேர்வு எழுதினர்.இதில் 6413 மாணவர்கள், 7364 மாணவிகள் என மொத்தம் 13777 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விழுக்காடு 94.45 சதவீதமாகவும், மாணவிகள் தேர்ச்சி விழுக்காடு 97.98 சதவீதம் ஆகும்.
தமிழக அளவில் தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிடும்போது 96.30 விழுக்காடு பெற்று மாநிலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 12-வது இடத்தை பெற்றுள்ளது.மொத்தம் 70 அரசு பள்ளிகளில் 18 அரசு பள்ளிகளும்,அரசு உதவி பெறும் 37 பள்ளிகளில் 8 பள்ளிகளும்,53 மெட்ரிக் பள்ளிகளில் 47 மெட்ரிக் பள்ளிகளும்,100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் ஒப்பிடும்போது 160 பள்ளிகளில் 73 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.