உள்ளூர் செய்திகள் (District)

தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்

Published On 2023-06-20 08:54 GMT   |   Update On 2023-06-20 08:54 GMT
  • ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
  • இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தா ரப்பன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு அரண் மனை எதிரே அமைந்துள்ள அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளர் அலுவல கத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தபால்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் முன்கூட்டியே மனுவாக அளித்து பயன் பெறலாம்.

தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப் பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் பெயர், பெறுபவரின் பெயர், ரசீது எண், பணவிடை, துரித தபால், பதிவு தபால் ஆகிய வற்றுக்கான விவரங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இதேபோல சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகார்களாக இருப்பின் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட குறைதீர்க்கும் முகாமிற்கு ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய பதிலால் திருப்தி யடையாதவர்கள் தங்களது குறைகளை மட்டும் அனுப்பி வைக்கலாம். அதன் பேரில் அளிக்கப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. தனியார் கூரிய ரில் அனுப்பப்படும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை தீத்தாரப்பன், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ராமநாத புரம் அஞ்சல் கோட்டம், ராமநாதபுரம் என்ற முகவ ரிக்கு வருகிற 22-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கடிதத்தின் உறையின் மீது தபால் சேவை குறைதீர்க்கும் முகாம், ஜூன் 23 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தா ரப்பன் தெரிவித்தார்.

Tags:    

Similar News