- ராமநாதபுரத்தில் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
- இதில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 17, 18-ந்தேதிகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி தலைமை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பேசுகையில், முதல்-அமைச்சர் வருகிற 18-ந்தேதி மண்டபத்தில் நடைபெற உள்ள மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
இதில் வருவாய்த்துறை, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மீன்வளத்துறை மற்றும் பிற துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தொடர்புடைய துறைகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், வளர்ச்சி முகமை முகமை திட்ட இயக்குநர் (பொறுப்பு) அபிதா ஹனிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.