ராமநாதபுரத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பால் பொதுமக்கள் அச்சம்
- ராமநாதபுரத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வடிகால் இல்லாமல் மழை நீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் சளி மற்றும் காய்ச்சல் பரவி வருகிறது. இதேபோல் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவுகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு வார்டில் மட்டும் 20-க்கும் அதிக மானோர் சிகிச்சை பெறு கின்றனர்.
டெங்கு பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு தனி வார்டு அமைக்கப்பட் டுள்ளது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு டெங்கு வார்டில் 8 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது
20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். அதேபோல் தனியார் மருத்துவமனை களிலும் ஏராளமானோர் சிகிச்சை பெறுகின்றனர். கிராமப்புறங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிக ரித்துள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
ஊராட்சிகளில் சுகாதா ரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.