- கவினா சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவிகள் மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
- வட்டார அளவிலான சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவ,மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடந்தது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள பாம்பூர் கவினா இண்டர் நேஷனல் சி.பி.எஸ்.சி. பள்ளியில் தென் மாவட்ட5-வது குறு வட்டார அளவிலான சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவ,மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடந்தது. தென் பொதுவக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் இளமுருகு இளஞ்செழியன் தொடங்கி வைத்தார். பள்ளியின் நிறுவனர் கண்ணதாசன் பாண்டியன், தாளாளர் ஹேமலதா கண்ணதாசன், விளங்குளத்தூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் சுமிசுதிர் வரவேற்றார். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் கவினா பள்ளியைச் சேர்ந்த 12 வயது பிரிவு மாணவி ஹேமதர்ஷினி, 14 வயது பிரிவு சுரேகா, 17 வயது பிரிவு ஜோஷிதா ஆகியோர் முதலிடம் பெற்று 3 தங்கப் பதக்கங்களை பெற்றனர்.மேலும் இந்த பள்ளி மாணவ, மாணவிகள் 13 வெள்ளி பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 22 பதக்கங்களை வென்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
அவர்களையும், நீச்சல் பயிற்சியாளர்கள் விஜயேந்திரன், சரவணன்,உடற்கல்வி ஆசிரியை சத்யா ஆகியோரையும் ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும், பாராட்டினர்.