- கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மத நல்லிணக்க புனித ரமலான் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி ஹமீதியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
கீழக்கரை ரோட்டரி சங்கத்தலைவர் சுல்தான் சம்சூல் கபீர் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட டவுன் தலைமை ஹாஜி அல்ஹாஜ் சலாகுதீன் ஆலிம், ஓய்வு பெற்ற ஆசிரியர் காசி கணேசன், மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் ஆகியோர் நோன்பின் மகிமை பற்றி பேசினர்.
இதில் கீழக்கரை நகராட்சி தலைவர் செஹானஸ் ஆபிதா, சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி மேற்பார்வையாளர் சாம்பசிவம், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கே.ஆர்.டி.கிருஷ்ணமூர்த்தி, கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர்கள் மீரான்அலி, பயாஸ், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் ஷேக் தாவூது, பேராசிரியர்கள் மரியதாஸ், பாலகிருஷ்ணன், எபன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ரோட்டரி சங்க செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பொருளாளர் சிவகார்த்திக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.