ரூ.99¾ கோடி மதிப்பில் பிரதான கால்வாய்கள் சீரமைப்பு
- ரூ.99¾ கோடி மதிப்பில் பிரதான கால்வாய்கள் சீரமைக்கப்படுகிறது.
- பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பகைவென்றி ஊராட்சியில் நீர் பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் வைகை உப வடிநில ஆற்றுப்பகுதி சீர மைக்கப்பட்டுள்ளது. இதனை அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், திட்ட இயக்குநருமான தென்காசி ஜவகர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சிவ கங்கை மாவட்ட உப வடிநில ஆற்றுப்பகுதிகளை சீர மைத்து பாசன பயன்பாட்டிற்கு பயன்பெறும் வகையில் கடந்த ஆண்டு ரூ99.75கோடி மதிப்பீட்டில் 59 கண்மாய்கள் மற்றும் அணைக்கட்டுகள் சீரமைக்கப்பட்டிருந்தன. அதன் மூலம் 5521.66 ஹெக்டேர் பரப்பளவு பாசனவசதி பெற்று பயன் பெற்றுள்ளார்கள்.தற்பொது வைகையாற்றில் உள்ள பார்த்திபனூர் வரும் மதகு அணைக்கு கீழ் இடது பிரதான கால்வாயின் மீதான 45 கி.மீ தூரம் மராமத்து பணிகள் மேல் மற்றும் கீழ் நாட்டார் கால்வாய் சீரமைத்தல் மற்றும் 48 தலைமதகுகளும், 13 குறுக்கு நீரொழுங்கிகள், 3 பாலங்கள், 6 கட்டுமானம் பணிகள் என ரூ53.66 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 12639.00 ஹெக்டேர் பாசன வசதி பெறும் வகையில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது வேளாண்மை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.