திட்டப்பணிகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் - கவுன்சிலர் கோரிக்கை
- திட்டப்பணிகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிப்பதாக கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை தெரிவித்தார்.
- அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது.துணைத்தலைவர் வக்கீல் வி.எஸ்.ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.ஆணையாளர் செல்வராஜ் வரவேற்றார். 21 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் 20-வது வார்டு கவுன்சிலர் சேக் ஹுசைன் நகர் மன்ற கூட்டத்தில் பேசியதாவது:-
கடந்த கால கூட்டங்களில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் என்னென்ன? எங்கே? எவ்வளவு? சதுர அடியில் இடம் உள்ளது என ஆய்வு செய்து பொதுமக்களும், எங்களுக்கும் தெரியும் வண்ணம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அது இன்று வரை நடக்கவில்லை.
நகரில் உள்ள வார்டுகள் குளறுபடிகள் பற்றி நான் மட்டுமல்ல, பல உறுப்பி னர்கள் அதை நிவர்த்தி செய்ய கோரிக்கையை முன் வைத்தனர். யார், யாருக்கு எந்த வார்டு என்பது பற்றி தெரியவில்லை. அதை தெரிவிக்க நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்து அவர்களிடம் விளக்கி அவரவர் எல்லையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறை வேறவில்லை. நகரின் மெயின் ரோடு பகுதி அழ காகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டி ரோட்டின் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதித்து, ஆக்கிரமிப்பு களை குறைக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை யும் நடக்கவில்லை.
கீழக்கரையில் ஒப்பந்ததா ரர்கள் பணிகள் தரமானதாக வும், விரைவாகவும் நேர்மை யாகவும் இருக்கும் வண்ணம் சமூக ஆர்வலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்து குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை யும் கண்டு கொள்ளவில்லை. எங்களின் நியாயமான கோரிக்கைக்கான பதிலை அடுத்த கூட்டத்தில் தெரி விக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.